திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.சென்னையை சேர்ந்த அபி நரசிம்மன் என்பவர் மேட்டூருக்கு சென்று திரும்பி கொண்டிருந்த போது, காரில் இருந்து புகை வந்துள்ளது.உடனே சுதாரித்து கொண்டு காரை விட்டு அபி நரசிம்மன் இறங்கிய நிலையில், கார் கொழுந்துவிட்டு எரிந்தது.தொடர்ந்து தகவல் அறிந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இந்நிலையில், அவரது காரில் போலி 2 ஆயிரம் ரூபாய் கட்டுகள் இருந்ததால், போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.