news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மழை நீரில் விழுந்த தங்க கம்மல், போராடி எடுத்த இளம்பெண்
tv

Also Watch

tv

Read this

மழை நீரில் விழுந்த தங்க கம்மல், போராடி எடுத்த இளம்பெண்

தங்கம்-ன்னா சும்மாவா?

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold missing

காதில் இருந்து தவறி, கழன்று மழை நீரில் விழுந்த தங்க கம்மலை போராடி தேடி எடுத்த பெண், முகத்தில் சந்தோஷத்திற்கு அளவே இல்லை...
பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக வந்த பெண் ஒருவர், சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது, காதில் அணிந்திருந்த ஒருபக்க தங்க கம்மல் கழன்று விழுந்தது. அதன் பிறகு அந்த பெண்ணின் மீது விழுந்த கம்மல் திருகாணியை எடுத்து விட்டார். ஆனால், அந்த கம்மல் சாலையில் தேங்கி இருந்த மழை நீரில் விழுந்துவிட்டது. அதனை தேடி எடுக்க முயன்றும் கிடைக்காத நிலையில், அங்கேயே அமர்ந்து அந்த தங்க கம்மலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்களும் வந்து தேடினார்கள். சாலையில் மழை நீர் அதிகமாக தேங்கி இருந்ததால், அருகில் இருந்த கடையில் இருந்து பக்கெட் எடுத்து வந்து தண்ணீரை வெளியேற்றி, தேட ஆரம்பித்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தேங்கி இருந்த மழைநீரில் விழுந்த தங்க கம்மலை அந்த பெண் தேடி எடுத்தார். தண்ணீரில் விழுந்த தங்க கம்மல் கையில் கிடைத்த பிறகு, அந்த பெண்ணின் முகத்தில் சந்தோஷம் மலர்ந்தது. தங்கம் விற்கும் விலைக்கு, குண்டு மணி தங்கம் என்றாலும் சும்மாவா?

தற்போது, தங்கம் காட்சி பொருளாக உள்ள நிலையில், காதில் இருந்து கழன்று விழுந்த தங்க கம்மலை பெண் ஒருவர் விடாமல் தேடி எடுத்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
38 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved