தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள், படகு இல்லத்தில் கூட்டம் அலைமோதுவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். மோட்டார் படகு, துடுப்பு படகு, மிதிபடகு என தங்களுக்கு விருப்பமான படகுகளை தேர்வு செய்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் படகு சவாரி செய்து ஏரியின் அழகை கண்டு களித்தனர். அதே போல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.