Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 02:06 PM
By: Manigandan Raja

நெடுஞ்சாலையோரம் தீ விபத்து :
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் அவ்வப்போது வனப்பகுதிகளில் தீப்பற்றி வருகிறது. மேலும் நகர்புறங்களிலும் குப்பை கிடங்குகள் சாலையோர சிறு வனப்பகுதிகளில் அவ்வப்போது தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வத்தலகுண்டு செல்லும் சாலையில் திடீரென செடிகளின் தீப்பற்றியது. மளமள பற்றி எரிந்த அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவியது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது போல வானுயர கரும்புகை மண்டலம் எழுந்தது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சாலையோரம் இருந்த செடிகளுக்கு மர்ம நபர்கள் யாரும் தீ வைத்திருக்கலாம் என சொல்லப்படும் நிலையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved