Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 01:39 PM
By: Manigandan Raja

விபத்தின் சிசிடிவி காட்சி :
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் பகுதியில் அன்பழகன் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக நாமக்கல் பகுதியை சேர்ந்த கௌசிக் என்பவர் தனது தாயாருடன் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கெளசிக் கார் மீது அதி வேகமாக மோதியுள்ளது.
இதில் கௌசிக் ஓட்டு சென்ற கார் மோட்டார் சைக்கிள் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி கறிக்கடைக்குள் கார் புகுந்துள்ளது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் நின்று கொண்டிருந்த
சின்னப்பள்ளி பாளையம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (40), ரமேஷ், ஸ்ரீ ராமசமுத்திரம் பகுதியை சேர்ந்த கொடியரசு (45), வடிவேல் மற்றும் காரில் இருந்த கௌஷிக் (35), அவரது தாயார் ஈஸ்வரி (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
பின்னால் வந்து மோதிய காரில் இருந்தவர்கள் இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் காரை ஓட்டி வந்தது யார் என்றும் காரில் உடன் வந்தவர்கள் யார் என்பதும் தெரியவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக கரூர் மற்றும் நாமக்கல் பகுதி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் சுபாஷ் பலத்த காயமடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரமேஷ் என்பவரது கால் முறிவு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் சென்ற கார் மீது பின்னாள் வந்த கார் மோதிய இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியான நிலையில் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved