news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 17 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார் விபத்தில் சிக்கியது
tv

Also Watch

tv

Read this

17 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார் விபத்தில் சிக்கியது

களக்காடு, திருநெல்வேலி

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கார் விபத்து

சிறுவன் ஓட்டி சென்ற கார் விபத்தில் சிக்கியது : 

களக்காடு அருகே உள்ள கீழ துவரை குளத்தை சேர்ந்தவர் பால் பாண்டி மகன் துரைப்பாண்டி (17). நேற்று இவர் தனது உறவினரான முருகன் (45) என்பவருக்கு சொந்தமான காரை பெட்ரோல் நிரப்புவதற்காக ஓட்டி சென்றார் அவருடன் காரில் கீழ துவரை குளத்தை சேர்ந்த முருகன் மகன் கன்சிகா (4), மற்றும் உறவினர்களின் குழந்தைகளான தினேஷ் (10), பிரதீப் (9), லித்திஷ் (8) ஆகியோரும் சென்றனர்.

மங்கம்மாள் சாலையில் சென்ற போது கார் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் சிறுமி கன்சிகா பலியானார். துரைப்பாண்டி உள்பட நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர் இதில் துரைப்பாண்டி களக்காடு தனியார் மருத்துவமனையிலும் தினேஷ் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பிரதீப் லித்திஷ் நெல்லை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர்.

இது பற்றி புகாரின் பேரில் களக்காடு போலீசார் காரை ஓட்டி வந்த சிறுவன் துரைப்பாண்டி மற்றும் அவருக்கு கார் கொடுத்த முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதிய ஆம்னி வேன்

அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதிய ஆம்னி வேன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 27 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved