தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாரநாத பெருமாள் - சாரநாயகி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.