மதுரை மாவட்டம் வீரகனூர் சுற்றுச்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சரவணன், தனது மனைவுயுடன் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தீபாவளி பர்ச்சேஸை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீரகனூர் சுற்றுச்சாலை மேம்பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த போது கார் தீடிரென தீப்பிடித்து எரிந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் காரை விட்டு இறங்கி உயிர் தப்பினர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்த நிலையில், கார் முழுவதும் தீக்கிரையானது.