சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.வெள்ளியம்பட்டி கிராமத்தில் ஜெயக்குமார் நடத்தி வரும் ஆலையில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அருகிலுள்ள குடோனுக்கு பணியாளர் சுரேஷ் எடுத்துச் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ஏற்பட்ட தீ விபத்தில், குடோனை சுத்தம்செய்துக் கொண்டிருந்த ஜெயராமன் உயிரிழந்தார்.மேலும் அதிலிருந்த பணியாளர்கள் சுரேஷ், முத்துராஜ், கார்த்தி ஆகியோர் காயமடைந்தனர்.விசாரணையில் குடோன் வைப்பதற்கு அனுமதி பெறாதது தெரியவந்த நிலையில், தலைமறைவாக உள்ள உரிமையாளர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.