காங்கிரஸ் கட்சி உடன் வெற்றிகரமாக தொகுதி ஒதுக்கீட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். அனைவரும் பாராட்டும் வகையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து உள்ளதாகவும், அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத் திருமண விழாவில் கூறினார். காங்கிரஸ் உடன் தொகுதி உடன்படிக்கை முடிந்து, கையை அசைத்தது பெரிய வைரல் ஆகி விட்டதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களின் கேள்விக்கு எதார்த்தமாக பதில் அளித்தேனே தவிர, திட்டமிட்டது அல்ல என்றும் நகைச்சுவையாக கூறினார். அன்பில் மகேஷ் இல்ல திருமண விழா தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;இந்த விழாவுக்கு நான் எந்த சூழலில் வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நேற்று இரவு வரை கூட்டணி கட்சியோடு பேசி, ஒரு ஒப்பந்தத்தை முடித்து விட்டு தான், அதுவும் வெற்றிகரமாக முடித்து விட்டு தான், எல்லோரும் பாராட்டக் கூடிய வகையில் முடித்து விட்டு தான் வந்திருக்கிறேன். கை அசைத்தது வைரல்சமூக வலை தளங்களிலும் செய்தி சேனல்களிலும், நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறும் போது, கையை எடுத்து ஒரு சைகை செய்திருப்பேன். அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. ஏதோ காரில் ஏறும் போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் முடிந்துவிட்டதா? என கேட்டார்கள். அதற்கு நான் "All Finished", எல்லாம் முடிந்துவிட்டது என சைகை மூலம் சொன்னேன். அது இன்று வைரலாகியுள்ளது. மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சியோடு இங்கு, நான் வந்திருக்கிறேன். இந்த திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்யசபாவிற்கு இரு வேட்பாளர்களை அனுப்ப இருக்கிறோம். கூட்டணி கட்சிகளுக்கு இரு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதனால் தான் இந்த திருமணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு செல்ல வேண்டும். நான் வந்தே ஆக வேண்டும் என கட்டளையிட்டிருக்கிறார்கள். ஆகவே, திருமணத்தை முடித்துவிட்டு உடனடியாக செல்ல வேண்டிய சூழல் இருக்கிற காரணத்தால் தான் வேகவேகமாக வந்து திருமணத்தை முடித்து வைத்துவிட்டு செல்கிறேன்இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். Related Link திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு உடன்பாடு