சென்னை அடுத்த பூந்தமல்லியில், தாய் மற்றும் மகளை 2 தெரு நாய்கள் கடித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பூவிருந்தவல்லி நகராட்சி 13ஆவது வார்டு, மகாலட்சுமி நகரை சேர்ந்த யாஸ்மின் மற்றும் அவரது ஒன்பது வயது மகள் சமீரா, தெருவில் நடந்து சென்றபோது, அங்கிருந்த தெரு நாய்கள் சிறுமியை கடித்துள்ளது. நாய்களிடம் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற யாஸ்மினையும் நாய்கள் விட்டு வைக்கவில்லை. இதில், சிறுமி சமிராவிற்கு 10க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதேபோல், மற்றொரு பகுதியில் சைக்கிளில் சென்ற சிறுவனை தெரு நாய் துரத்தியது. அதிகரித்து வரும் தெரு நாய் தொல்லைகளால், பொது மக்கள் அச்சத்துடனேயே சென்று வருவதாக, கூறி உள்ளனர். இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்துள்ள நிலையில் இதுகுறித்து பூவிருந்தவல்லி நகராட்சி, எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மனிதர்களை, தெரு நாய்கள் ஆக்ரோஷமாக கடித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.இதையும் பாருங்கள்... ஆபத்தில் சிக்கிய மகள்..காப்பாற்ற போராடிய தாய்.. பேரதிர்ச்சி காட்சி | DogAttack | MotherSavesDaughter