மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை தொடங்குகின்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழச்சியில், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து சாம்பியன் பட்டம் வெல்லும் மாவட்டத்திற்கு வழங்கப்படும் கோப்பையும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.வரும் 24ம் தேதி வரை, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.