Also Watch
Read this
By: Web Team

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைதான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் திங்கள் கிழமை நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23 ஆம் தேதியும், நடிகர் கிருஷ்ணா கடந்த 26 ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved