Also Watch
Read this
By: Manigandan Raja

மாசிமாத தீமிதி திருவிழா :
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சவுரிப்பாளையத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து தினந்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் சுவாமி திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர் இன்று காலை தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அப்போது பெண்கள் உட்பட சில பக்தர்கள்பல்வேறு அலகுகளை குத்திக் கொண்டும், அதில் இரண்டு பேர் விமான அலகு குத்திக்கொண்டு தொங்கியபடி கோவில் வரை ஊர்வலமாக வந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இக்காட்சி அனைவரையும் இயக்க வைத்தது.
இந்த தீமிதி திருவிழாவில் சவுரிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ சக்தி மாரியம்மன் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved