Also Watch
Read this
By: Manigandan Raja

மாரியம்மன் கோவில் 58வது ஆண்டு திருவிழா :
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பிள்ளையார்நத்தத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் நின்ற நிலையில் அருள்பாலித்து வருகிறார், ஒவ்வொரு வருடமும் திருவிழா எடுத்து அம்மனை வழிபாடு செய்வது வழக்கம்.
இவ்வருடம் 58-வது வருட ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வான கடந்த 12 ம் தேதி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது.
இதனைத் தொடர்ந்து அக்கினி சட்டி எடுக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். தொடர்ந்து 18ம் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் திருவிழா தொடங்கியது. 19 ஆம் தேதி நேற்று அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வான (20.5.26) இன்று விரதம் இருந்த பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, அழகு குத்தி ஊர்வலமாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குளியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தி முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருவிழாவை காண சின்னாளபட்டி திண்டுக்கல் மதுரை ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved