news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீஸ் அதிர்ச்சி தோல்வி
tv

Also Watch

tv

Read this

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீஸ் அதிர்ச்சி தோல்வி

ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்

அமெரிக்க வீரரிடம் தோல்வியடைந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் :

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீஸ் நாட்டின் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அமெரிக்காவின் லேனர் டைன் ஆகியோர் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அமெரிக்க வீரர் லேடர் டைன் 7-க்கு 6, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அபார ஆட்டம் :

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்திய ஜோடி சிறப்பாக விளையாடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராதிகா சர்மா - சாத்விக் ரெட்டி ஜோடி, ஸ்காட்லாந்தின் ஜூலி மேக்பெர்சன் - அலெக்சாண்டர் டன் ஜோடியை 16-க்கு 21, 21-க்கு 14, 21-க்கு 18 என்கிற செட் கணக்கில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

6-வது முறையாக உலக கோப்பையில் களம் காணும் ரொனால்டோ :

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் உலகின் தலைசிறந்த வீரரான போர்ச்சுக்கல் நாட்டின்  கிறிஸ்டியானோ ரொனால்டோ 6-வது முறையாக களம் காண்கிறார். 6-வது முறை விளையாடுவதன் மூலம் உலக கோப்பையில் முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைப்பார். அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சி உள்பட 5 வீரர்கள் 5 உலக கோப்பையில் விளையாடி உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி :

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் கொண்ட அணியில் குஜராத் டைட்டனை சேர்ந்த 7 வீரர்கள் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். கில், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் மற்றும் குர்னூர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். போட்டி வரும் ஜூன் 6ஆம் தேதி சண்டிகரில் தொடங்குகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி :

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற வங்கதேச அணி, தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்ஸில் 437 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், 5ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 358 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. தொடர்ந்து வங்கதேச அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Link
220 ரன்கள் இலக்கை சுலபமாக சாய்த்த ராஜஸ்தான் ராயல்ஸ்

220 ரன்கள் இலக்கை சுலபமாக சாய்த்த ராஜஸ்தான் ராயல்ஸ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 23 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved