news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மூட்டை மூட்டையாக ஆவணங்கள் தீ வைத்து எரிப்பு
tv

Also Watch

tv

Read this

மூட்டை மூட்டையாக ஆவணங்கள் தீ வைத்து எரிப்பு

திருப்புவனம், சிவகங்கை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆவணங்கள் தீ வைத்து எரிப்பு

ஆவணங்கள் தீ வைத்து எரிப்பு :

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டார வளமையத்தில் மூட்டை மூட்டையாக ஆவணங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது திருப்புவனம் வட்டார வளமைய அலுவலகம் அரசு ஆண்கள் பள்ளி எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.

திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இங்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன மாணவ மாணவிகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வண்ணம் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

இதற்காக அரசு தரப்பில் இருந்து வட்டார வளமயங்களுக்கு படிவங்கள் ஆவணங்கள் பயிற்சி கையேடுகள் புத்தகங்கள் வழங்கப்படும் மேலும் திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் வகுப்பறைகள் மின் வசதி குடிநீர் வசதி பாதை வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஒவ்வொரு வருடமும் வட்டார வளமைய அதிகாரிகள் அறிக்கை அனுப்ப வேண்டும்.

இந்த படிவங்கள் கையேடுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் வருட கணக்கில் பயன்படுத்தாமல் வைத்திருந்தனர் இன்று இவற்றை பள்ளி மைதானத்தில் மூட்டை மூட்டையாக வைத்து எரித்துள்ளனர் பொதுமக்கள் செல்போனில் படம் எடுத்ததை தொடர்ந்து அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து ஓடிவிட்டன எந்தவித ஆவணங்கள் எரிக்கப்பட்டது என கேட்டதற்கு.

பதில் சொல்ல மறுத்துவிட்டனர் அரசு அலுவலகத்தில் அலுவல் நேரம் முடிந்தபின் மூட்டை மூட்டையாக ஆவணங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
ஊதியம் வழங்கவில்லை என தொழிலாளிகள் வேதனை

ஊதியம் வழங்கவில்லை என தொழிலாளிகள் வேதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 21 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved