news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews டெல்லியை வந்தடைந்தார் பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

டெல்லியை வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi

5 நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணம் நிறைவு :

5 நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, டெல்லியை வந்தடைந்தார். ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு கடந்த 15-ம் தேதி 5 நாள் சுற்றுப்பயணமாக புறப்பட்டுச் சென்றவர், அந்நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடிக்கு மிக உயரிய அக்ரிகோலா பதக்கம் :

இத்தாலி தலைநகர் ரோம் நகரிலுள்ள ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அக்ரிகோலா பதக்கம் வழங்கப்பட்டது. இந்த பதக்கம், உலகளாவிய உணவு பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் நீண்டகால பங்களிப்புகளை ஆற்றிய புகழ்பெற்ற தலைவர்களுக்கும், தனிநபர்களுக்கும் வழங்கப்படும் மிக உயர்ந்த கவுரவமாகும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் போல ராகுல் காந்தி பேசுகிறார் :

பிரதமர் மோடி, அமித்ஷா குறித்த ராகுல் காந்தியின் பேச்சு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை போல உள்ளதாகவும், இந்திய எதிர்ப்பு நக்சல் சக்திகளின் உருவமாக ராகுல் உள்ளதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.

தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் ஏற்பட்ட விரக்தியையும், ஏமாற்றத்தையும் ராகுலின் கருத்துகள் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

மம்தா பானர்ஜி உறவினருக்கு 43 இடங்களில் சொத்து :

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி பெயரில் கொல்கத்தாவில் 43 இடங்களில் சொத்து இருப்பதாக பா.ஜ.க. பட்டியல் வெளியிட்டுள்ளது.

கொல்கத்தா மாநகராட்சி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 43 சொத்துக்கள் உள்ளதாக கூறி, ஆவணங்களையும் சமூக வலைதள பக்கத்தில் பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் ரூ.7 லட்சம் கோடி மிச்சம் :

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் நாட்டுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.பி.செளத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டம் தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறுவதை குறைக்கும் எனவும், வளர்ச்சி, நிர்வாகம், வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிற பணிகளில் மத்திய அரசை கவனம் செலுத்த வைக்கும் என்றும் கூறியுள்ளார்.

Related Link
'பஸ்தர் கே சங்' நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சி

'பஸ்தர் கே சங்' நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 21 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved