Also Watch
Read this
By: Manigandan Raja

தொழிலாளிகள் வேதனை :
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சிவகாமி தேயிலை தோட்டம் மற்றும் கொய்மலர் மற்றும் ஸ்ட்ராபெரி காய்கறி போன்ற விவசாயிகளை உற்பத்தி செய்து வருகின்றனர்
இந்த எஸ்டேட் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கோத்தகிரி பகுதியில் உள்ள ஈளாடா பகுதியில் செயல்பட்டு வருகிறது இங்கு 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த ஆண்டுகளில் வேலை செய்து வந்த நிலையில் தற்போது தோட்ட நிறுவனர் தேயிலை எஸ்டேட் மற்றும் நிர்வாகத்துக்கு வராத காரணத்தினால்.
தொழிலாளருக்கு வேண்டிய ஊதியம் எதுவும் வழங்கப்பட வில்லை இதனால் பல தொழிலாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 60 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர் இங்கு பணி செய்த தொழிலாளர்கள் கணவனால் கைவிடப்பட்ட விவசாய பெண்களின் குழந்தைகள் கல்வி செலவினங்களை கூட இவரை கவனித்து வந்தவுடன்.
பல தொழிலாளர்களுக்க மருத்துவம் உதவிகள் செய்து வந்துள்ளார் மேலும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் வழங்கி வந்ததோடு கிராமப் பகுதியில் உள்ள பல கோயில்களுக்கு புணர் அமைப்பு பணிகளை செய்து உள்ளார்.
இந்த தோட்ட நிறுவனரின் வீடு சமவெளி பகுதியில் உள்ளதால் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஏதோ காரணத்தினால் கோத்தகிரி எஸ்டேட்டுக்கு வருவதில்லை இதனால் தொழிலாளர்கள் முதலாளியே பார்க்க வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். இது சம்பந்தமாக குறைகளைக் கேட்ட பொழுது அவர்கள் வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved