Also Watch
Read this
By: Manigandan Raja

சோலார் நிறுவன மின்கம்பங்கள் :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லாக்கோட்டை ஊராட்சிக்கு சொந்தமான மற்றும் தனிநபர் பட்டா இடங்களிலும் நெடுஞ்சாலை ஓரங்களிலும் மிக அருகாமையிலும் எவ்வித அனுமதியின்றி கிராம சாலை நடைபாதையிலும் நிறுவப்படும் தனியார் சோலார் நிறுவனத்தின் மின்கம்பங்களை தடுத்து நிறுத்த கோரி.
அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து இன்று கல்லாக்கோட்டையில் அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் கந்தர்வகோட்டை பட்டுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved