ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வட மாநில தொழிலாளர்களை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற ஆறு பேரை அரக்கோணம் போலீசார் 5 மணி நேரத்தில் கைது செய்தனர். பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரவீன் என்பவரது நிலத்தில் விவசாய பணி மேற்கொண்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிலர், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க கும்பினி பேட்டைக்கு சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் அவர்களை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.