தர்மபுரியை அடுத்த சோகத்தூரில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தற்போது, 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் பேருந்து நிலையத்தை, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் ஆயிரத்து 733 ஏக்கரில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். இந்த சிப்காட் தொழிற் பூங்காவில் ஆலை அமைக்க 201 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதையும் பாருங்கள் - பிரம்மாண்ட பஸ் ஸ்டாண்ட், களத்தில் இறங்கிய முதல்வர் | Dharmapuri News | New BusStand