தைப்பூசத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சாமி கோவிலில், சிவ வாத்தியங்கள் முழங்க வெள்ளி திருத்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானிடம் பக்தர்கள் மனமுருகி வழிபாடு நடத்தினர். இதனையொட்டி சிறுமிகள் சிவன், பார்வதி வேடமிட்டு சிவவாத்தியத்திற்கு தாண்டவமாடியது பக்தர்களிடையே மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.