Also Watch
Read this
By: Web Team

சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஆக இருந்த சங்கர் ஜிவாலை , தீ ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம், ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வந்த சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31ஆம் தேதி உடன் ஓய்வு பெறுகிறார்.
தொடர் விடுமுறையால், அவருக்கு இன்று, பிரிவு உபச்சார விழா சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், சங்கர் ஜிவாலை, தீ ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்து உள்ளார்.
கடந்த 2023 ஜூன் 30ல் டிஜிபி ஆக பதவியேற்றுக் கொண்ட சங்கர் ஜிவால் 2017 மற்றும் 2019ம் ஆண்டு இந்திய குடியரசுத்தலைவர் பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீ ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சங்கர் ஜிவால், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved