சென்னை, அண்ணா நகர் திருமங்கலம் பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த போதை ஆசாமிக்கு கை-காலில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதிவாணன் என்பவன் மது போதையில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அவனை போலீசார் கைது செய்தனர். அப்போது தப்பியோட முயன்று தவறி கீழே விழுந்து கை, கால் உடைந்ததால் அவனுக்கு மாவு கட்டு போடப்பட்டது.