இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், 4 பேர் கடலில் தத்தளித்த நிலையில் சக மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.