Also Watch
Read this
By: Web Team

நாம் தமிழர் சார்பில் மரங்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தினை நேரில் பார்வையிட்ட சீமான், தன்னை பார்த்து குரைத்த வளர்ப்பு நாய்களை மாநாட்டில் இறக்கி விட்டு விடுவேன் என தவெக மாநாட்டை சுட்டிக்காட்டி கிண்டலடித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வரும் 30ம் தேதி ”மரங்களுக்காக பேசுவோம், மரங்களோடு பேசுவோம்” என்ற தலைப்பில் மரங்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி, மாநாடு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு சீமான் போட்டோ ஷூட் நடத்தினர்.
விண்டேஜ் திரைப்படங்களில் மரத்தை சுற்றி சுற்றி டூயட் ஆடுவதை போல ஒவ்வொரு மரத்தையும் கட்டிப்பிடித்து சீமான் முத்தமிட, அதனை அவரின் தம்பிகள் பல ஆங்கிளில் ரசித்து ரசித்து போட்டோ எடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved