Also Watch
Read this
Posted on: Dec 04, 2025 08:20 AM
By: Web Team
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில், குடும்ப பிரச்சனையை விசாரிக்க சென்ற காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடர்பாக மாவட்ட எஸ்பி அரவிந்த் விளக்கமளித்துள்ளார்.
ஆலங்குளம், நெட்டூர் பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை விசாரிக்க சென்ற இடத்தில் அப்பகுதியிலுள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக குற்றவாளி தமது மாமனாரை வெட்ட முயற்சி செய்துள்ளார். அவரை வெட்ட விடாமல் தடுத்த காவலர் மீது ஏற்பட்ட கோபத்தால் காவலரை வெட்டி விட்டு தப்பிவிட்டார். இவரை பிடிக்க திருநெல்வேலி மற்றும் தென்காசி போலீசார் தீவிரமாக தேடி வருதாக எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved