கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழாவையொட்டி, நான்காம் நாளில் வெள்ளி கருட சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது. வெள்ளி கருட வாகனத்தில் உற்சவர் பெருமாள் எழுந்தருளினார். மிகப்பெரிய தீபங்களை ஏந்தியபடியும், மேளதாளங்கள் முழங்க சுவாமி வீதியுலா சென்றதையடுத்து, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி - பைக் மீது மோதி விபத்து