ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்த கணவன் போலீஸில் சரணடைந்தார். சித்தோடு செங்குந்தபுரம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த கோபால், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி மணிமேகலை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த சூழலில், மிக்சர் கடையில் பணிபுரிந்து வந்த மணிமேகலைக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.