தூய்மை பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்து 2 ஆவது நாளாக சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூய்மை பணியை தனியார்மயமாக்குவதை கைவிட கோரியும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் வியாழன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த மாலை 6 மணியளவில் விடுவித்த நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.அதன்படி தூய்மை பணியாளர்கள் 2 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.