புதுக்கோட்டையில் வெளிமாவட்ட பூக்கள் விற்பனை செய்ய தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட பூ உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் செயல்படும் பூ மார்க்கெட்டில் பல்வேறு வகையான பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒரு சில நேரத்தில் பூக்கள் விற்பனையாகாமல் இருப்பதாகவும், அதற்கு வெளிமாவட்டத்தில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருவதுதான் காரணம் எனவும் பூ உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.