மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேதமடைந்த நடைமேம்பாலத்தை அகற்றும் பணி காரணமாக சாலையில் நேற்று மாலை ஒரு வழிப்பாதையாக செல்ல அனுமதிக்கப்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன.