Also Watch
Read this
ரூ.3000 லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது.. ஒப்பந்த பணிக்கான தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்பு
கையும் களவுமாக அலுவலர் கைது
Updated: Sep 06, 2024 06:56 AM
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் ஒப்பந்ததாரரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகராக பணியாற்றி வரும் ஜெயபுஷ்பம் என்பவர், முடிவடைந்த ஒப்பந்த பணிக்கான பில்லை விடுவிப்பதற்காக, ஒப்பந்ததாரரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்திடம், ஒப்பந்ததாரர் அஜித்குமார் என்பவர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்,வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்தை கையும் களவுமாக கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved