சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் விஷவாயுத் தாக்கி உயிரிழந்த இரண்டு தொழிலாளிகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி அவர்களது உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிஸ்மில்லா நகரில் சனிக்கிழமை வீட்டின் செப்டிக் டேங்க் அமைக்கும் பணியின் போது விஷவாயு தாக்கியதில் ராமையா, பாஸ்கர் ஆகியோர் உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் இளையான்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்கக்கோரி அவர்களது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றதாக கூறப்படுகிறது.