கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பால் கேனில் கள்ளச்சாராயத்தை வைத்து விற்பனை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டார். சங்கராபுரம் அருகே உள்ள கானாங்காடு கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த கிராமத்தில் வீடுவீடாக சோதனை செய்த போலீசார், பால் கேனில் கள்ளச்சாராயத்தை வைத்து விற்பனை செய்து வந்த ஜான்சன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 12 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.