ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ரவுடிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே பேசியதாக தெரிவித்தார்.