சிவகங்கையில், கோவிலை சுத்தம் செய்ய அழைத்து சிறுவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகே உள்ள கிராமத்தில் பூசாரி பெரியசாமி, அப்பகுதியில் உள்ள சிறார்களை கொண்டு கோவிலை சுத்தம் செய்ய வைத்துள்ளார். அப்போது 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அந்த சிறுமி தாம் பயிலும் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.