Also Watch
Read this
Posted on: Jan 08, 2026 11:44 AM
By: Web Team
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் பொங்கல் வைத்து அமர்க்களப்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்காக, மாணாக்கர்கள் புத்தாடை அணிந்து வந்து மயிலாட்டம், ஒயிலாட்டம் என, ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து, மாணவ, மாணவிகளிடையே பொங்கல் வைக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதோடு, கரும்புகள் கட்டப்பட்ட மாட்டு வண்டியில் மாணாக்கர்கள் சவாரி செய்தும் உற்சாகமடைந்தனர். இதையும் பாருங்கள் - வாடிவாசலில் பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய காளையர்கள்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved