சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த சென்ற போலீசாருடன் பெண் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடப்பட்டனர். நடைபாதை வியாபாரிகளுக்கு மத்திய அரசின் நிதியில் நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டு வேறு இடத்தில் கடை அமைக்க அனுமதி அளித்த பின்னரும், அங்கு வியாபாரம் நடைபெறவில்லை எனக் கூறி நடைபாதையில் கடை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.