நாமக்கல்லில் ஏ.டி.எம் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல் அதிகாரிகளிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் ஆகிய இருவரிடமும் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி நேரடியாக வந்து விசாரணை நடத்தி தகவல்களை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து சென்றார்.