திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரம் திமுக பேரூராட்சி தலைவர், தங்கள் சமுதாயத்தை இழிவு படுத்தியதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மங்களம் காவல் நிலையத்தை விசிகவினர் முற்றுகையிட்டனர். பழனிசாமி என்பவர் இழிவுபடுத்தி பேசிய ஆடியோ இணையதளத்தில் வைரலானதை தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.