Also Watch
Read this
By: Manigandan Raja

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கோவில் பட்டாச்சார்யார்கள் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தை காரணம் காட்டி, உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved