பிரதமர் மோடியே திராவிடர் தான் என்ற பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும் இனத்தை அல்ல என்றார். வேலூரில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை கூறினார். தமிழ் தாய் வாழ்த்து பாடிய விவகாரத்தில் பாடியவர்கள் செய்த பிழைக்கு ஆளுநர் எப்படி பொறுப்பாக முடியும் என்றவர் முதல்வரும், துணை முதலமைச்சரும் இதனை பெரிதுபடுத்தி பேசுவது கண்டிக்க தக்கது என்றார். தமிழக அரசு சட்டத்தை மீறினால் அரசின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார் .