சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. சக்தி தலங்களில் முதன்மையானதும், பிரசித்தி பெற்ற தலமுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், பக்தர்கள், நேர்த்திக்கடனாக உண்டியல்களில் செலுத்திய காணிக்கை கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது. அதில் 1 கோடியே 31 லட்சத்து 96 ஆயிரத்து 418 ரூபாய் ரொக்கமும் 2 கிலோ 555 கிராம் தங்கமும், 3 கிலோ 899 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றன. அயல் நாட்டு நாணயங்கள் 948 காணிக்கையாக பெறப்பட்டன.