திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 28 நாட்களில் பக்தர்கள் ஒரு கோடியே 59 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருக்கோயில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக் கோயில் வசந்த மண்டபத்தில் காணிக்கை எண்ணப்பட்டது. ஆப்போது 921 கிராம் தங்கம், 11 ஆயிரம் கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.