திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அரசுப்பள்ளிக்கு கல்வி சீர் வழங்கி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பனையஞ்சேரி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளிக்கு, தொலைக்காட்சி பெட்டி வாங்க ரூபாய் 20,000 ரொக்க பணத்தையும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் மக்கள் வழங்கினர்.