ஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்டம் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குடும்பத்தினருடன் கேரளாவைச் சேர்ந்த மக்கள் தரிசனம் செய்தனர். அதிகாலையிலே வண்ண மலர்களால் ஐயப்பன் கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டும் பூக்களமிட்டும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிலையில் கோவிலுக்கு அதிகாலையில் முதலே குவிந்த மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.