வார விடுமுறையை முன்னிட்டு குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. விடுமுறை தினங்களில் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு செல்கின்றனர். அந்த வகையில் விடுமுறை என்பதால் திற்பரப்பு அருவிக்கு குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீராடினார். மேலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அங்கிருந்த வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.