கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பு பகுதியில் உள்ள பயணியர் நிழற் கூடம் சேதமடைந்து காணப்படும் நிலையில், அதனை சீரமைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிழற்கூடம் பயணிகள் அமர்வதற்கு கூட இருக்கைகள் இல்லாமல் சேதமடைந்துள்ளது.